ADS 468x60

04 November 2024

விவசாயிகளின் முன்னேற்றமே, வடகிழக்கின் முன்னேற்றம்


அன்பார்ந்த வடகிழக்கு மாகாணத்தின் விவசாயப் பெருமக்களே! மற்றும் இப்பகுதியின் நலனில் அக்கறை கொண்டோரே!

வடகிழக்கு மாகாணத்தின் உயிர்நாடி விவசாயம். இந்த மண்ணின் வளத்தையும், மக்களின் உழைப்பையும் நம்பி வாழும் நீங்கள் தான் இப்பகுதியின் முதுகெலும்பு. உங்கள் கைகள் விளைவிக்கும் உணவுதான் நம் அனைவரின் பசியையும் ஆற்றுகிறது.

ஆனால், இன்று வடகிழக்கின் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. நீர்ப்பாசனப் பிரச்சினைகள், சந்தை வாய்ப்புகளின் குறைபாடு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் எனப் பல இன்னல்கள் உங்களை வாட்டுகின்றன.

01 November 2024

திறனை வளர்

 
இந்த உலகம் நமக்காகக் காத்திருப்பதில்லை, ஆனால் நமது திறமைகளுக்காக மட்டும் காத்து நிற்கிறது. உன் திறமையை நம்பினால் அது உன் காத்திருப்புக்கு கைகொடுக்கும்.

இந்த உலகம் நமக்காக காத்திருப்பதில்லை. காலம் ஒருபோதும் நின்று விடுவதில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையை காத்துக்கொண்டு, எதற்கும் காத்திருக்கையில், இந்த உலகம் தன் பாதையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இந்த உலகம் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நமக்கு இடம் கொடுக்கிறது – அது நம் திறமைகள்.

உனது திறமைகளுக்கு நீ மதிப்பு கொடுத்தால், உன் திறமை உலகத்தின் கவனத்தை ஈர்க்கும். உனது திறமை உனக்கே தேவையான வாய்ப்புகளைத் தேடி கொண்டு வரும்.

நம்பிக்கை என்பது உன் திறமையைப் பறவையாக உயர்த்து விடும் அசைவான சிறகுகள்.
முயற்சி உனது திறமையை நன்கு பயன்படுத்தி வெற்றியை உனக்கு தேடி தரும் கருவி.

உன் திறமையை நம்பு. அது உன் கனவுகளையும், உன் எதிர்காலத்தையும் உருவாக்கிக்கொள்வதற்கான முக்கிய அஸ்திரம்.
இந்த உலகம் உனக்கு பதிலளிக்காமல் போகலாம், ஆனால் உன் திறமை, உன் உழைப்பு, உன் நம்பிக்கை உலகத்தையே உன் பின்னால் நிற்கச் செய்யும்.

நான் ஒரு திறமைசாலி என்று நீ நம்பினால், அந்த நம்பிக்கை உன் வாழ்க்கையில் ஒளிக்கற்றையாக நீண்ட காலமாகத் திகழும்.

25 October 2024

பொதுப் பிரச்சினைகளில் அக்கறை காட்டாத அரசியல்வாதிகள்

நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடல் மற்றும் ஆரோக்கியமான விவாதத்தை பேணுவது அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாகும். நாட்டை நேசிக்கும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிரதிநிதிகளிடம் இத்தகைய ஈடுபாட்டை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் இவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற பெயர் பெற்றார்கள். இப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாட்டுக்கு கிடைத்த வரம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் காலனித்துவ கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் இது போன்ற பல அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல்வேறு பாடங்களை ஆழமாகப் படித்து விவாதப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற இத்தகைய வரலாற்றுக் கதைகள் புதிய அரசியல்வாதிகளுக்கும் உதாரணமாக உள்ளது.

23 October 2024

பணம் பொருள் பெற்று வாக்களித்தால் என்னவாகும்?

ஒரு தேர்தலில் போட்டியிடும் தம்பி ஒருத்தர் என்னிடம் சொன்னார் 'அண்ணன் நம்மட்ட பணம் ஒன்றும் கிடையாது குணம் மட்டும்தான் உள்ளது, கிடைத்தால் தரமான சேவை செய்வேன்' ஆனால் இன்று ஒவ்வொரு வேட்பாளரும் பணத்தை வீசி செலவு செய்வதால், பத்து பதினைந்து கோடி இல்லாமல், மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது போல.

நீங்கள் எவ்வளவு கொள்கைவாதியாக, சேவகனாக இருந்தாலும் சரி, புத்திசாலியாக இருந்தாலும் சரி, அப்படிச் செலவு செய்ய முடியாவிட்டால், வேட்பாளராக இருப்பதில் அர்த்தமில்லை என்கின்ற நிலமை இல்லையா. அதற்கு பணம் கொடுக்கும் சமூகம் அதை முதலீடாகவும் செய்கிறது. கடைசியில் நமது வாக்கு வேறொருவரின் முதலீடாக மாறுகிறது.
அதன் பின்னர் நீங்கள் சொல்லுவதனை பா.உறுப்பினர் கேட்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அந்தக் கேள்விக்கு விலை பெற்றாச்சே!

19 October 2024

எதுடா தேசியம்? மக்களை ஏமாற்றுவதா!

இன்று எமது மக்களுக்கு என்ன நடந்துள்ளது? ஒன்றும் நடக்கவில்லை! ஐந்தைந்து வருடத்துக்கு ஒருதடவை வந்து வந்து அஞ்சி சதத்துக்கும் பெறுமதி இல்லாத வேலைகளைளே மக்களுக்கு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நன்மை பயக்கும் எல்லாவற்றினையும் செய்துள்ளனர்.

மண்னைக் கொள்ளையடித்தனர், மரத்தைக் கொள்ளையடித்தனர், வார் மற்றும் வாகனப் பேமிற்றுக்களை பெற்றுக்கொண்ளைடர். அபிவிருத்தி என்றுசொல்லி அளந்தளந்து கொமிசன் பெற்றனர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடி கோடியாய் வியாபாரம் ஆரம்பித்தனர். அவர்கள் நல்லாத்தான் இருக்கின்றனர்.
அதுமாத்திரமா, சிலர் வெறும் கோசமும், வேசமும், ஆர்பாட்டங்களும், ஆக்கிரோசங்களும் செய்வது மக்களை எப்படி வளர்துவிடும்? இது தேசியத்தின் சொத்தான மக்களை எப்படி வலுவூட்டும்?

17 October 2024

தலைவர் மாறினாலும் நம்ம தலையிடி மாறவில்லை- உணவின் விலையேற்ற அச்சுறுத்தல்

புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஒழிந்துவிட்டது என நினைத்த காலங்காலமாக செயல்படும் மார்க்கெட் மாஃபியா இந்த நாட்களில் மீண்டும் சுறுசுறுப்பாகி வருவதாக தெரிகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வௌ;வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

இன்றைய சந்தையை அவதானிக்கும் போது அரிசி விடயத்திலும் இதே போன்ற வர்த்தக மாபியா செயற்படுவது தெளிவாகின்றது. குறிப்பாக நாட்டு அரிசி (புழுங்கல்), சிவப்புப் பச்சை  மற்றும் சிவப்பு புழுங்கல் (நாடு) அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அரிசி நெருக்கடியைக் கருத்தில் கொண்டால், இந்த நாட்டில் விவசாயக் கொள்கையின் சீத்துமம் என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். கீரி சம்பா அரிசி விலையினை கடந்த சில வருடங்களில் வைத்து பார்க்கும்போது மிக அதிகமாக இருந்தது. இதனால், பல விவசாயிகள் நாம் சாதாரணமாக விரும்பி உண்ணும் நாடு மற்றும் சம்பா சாகுபடியை கைவிட்டு, கீரி சம்பா விளைவித்தனர்;.

15 October 2024

இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள்

 இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா?

ஆம்! ஆதாரம் இல்லாமலா ஒரு இன இருப்புப்பற்றி பேசிட முடியும், ஆதாரம் இல்லாமலா ஒரு தேசியம் பற்றி பேசிவிட முடியும்! ஆதாரம் இல்லாமலா உலக அரங்கில் போய் நிற்க முடியும்?

இலங்கையின் பழந் தமிழ்ப் பெயர் `ஈழம்` என்பதாகும். ஈழத்தினைச் சேர்ந்த சங்க காலப் புலவர் ஒருவரே சங்க இலக்கியப் பாடல்களையே பாடியுள்ளார். அவரது பெயர் ஈழத்துப் பூதன்தேவனார் என்பதாகும். இவரது பெயரின் முன்னொட்டான `ஈழம்` இன்றைய இலங்கையினைத்தான் குறிக்கின்றதா? என்ற ஐயம் உள்ளவர்கள் இவர் மொத்தமாக ஏழு சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார் அதனைப் பார்க்கவும்

அகநானூறு 88, 231, 307,
குறுந்தொகை 189, 343, 360,
நற்றிணை 366.

13 October 2024

இலங்கையில் ஏற்படவேண்டிய அரசியல் மாற்றம்

இலங்கையின் அரசியல் நிலைமை என்பது பல சவால்களை எதிர்கொண்டு உள்ளது. எளிதாகவே முன்னேற முடியாத நிலைமை மற்றும் அரசியல் முன்னணியில் உள்ளவர்களின் தீர்மானங்கள், நாட்டின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத விதமாக இருக்கிறது. எனவே, இலங்கையில் ஏற்படவேண்டிய சில முக்கியமான அரசியல் மாற்றங்களைப் பற்றி கீழே விவரிக்கின்றேன்.

### 1. **அரசியலமைப்பில் மாற்றம்**
இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்கள் தேவை. மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவது அவசியம். ஜனநாயக அடிப்படையில் செயல்படும் முறைமைகள் ஏற்படுத்த வேண்டும்.