ADS 468x60

29 December 2020

புதிதாகப் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் 'தொற்று புதிய வடிவில் எம்மை தாக்குமா!'

2020 இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருக்கும இத்தறுவாயில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு 2021 என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதனைக் காணலாம். அதே போல் மக்கள் ஆரம்பத்தில் இருந்த ஜாக்கிரதை மெது மெதுவாகக் குறைந்து எந்தவித அச்சமும் இன்றி அஜாக்கிரதயாக திரிவதனையும் பண்டிகைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான ஒரு ஆபத்தான பின்னணியில், இந்த நோய்த்தொற்று எமது நாட்டிற்கு மாத்திரம் பரவுவவில்லை இது உலகின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பரவி வருகின்றது. ஆனால் அவை நாட்டுக்கு நாடு மாறுபட்ட அளவுகளில் பரவி வருவதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மேலும் இதனால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போயுள்ளனர். 

28 December 2020

மாரிகாலமும் மாணவக் குழந்தைகளும்... கவனம்!

அடடா மழைடா அட மழைடா.... ஏனச் சிறுவர்கள் இந்தக் காலத்தில் கொரோணாவையும் பொருட்படுத்தாமல் கொண்டாடியும் அதே நேரம் பலர் திண்டாடியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக எமது கிழக்கு மாகாணம் எங்கும் அடை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதேபோல் மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே குழந்தைகளே மழை நீர் நமக்கும் பூமிக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மழைக் காலத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதும் அவசியம் அன்பு மாணவர்களே!

இந்த மழைகாலத்தில் மிக மிக ஸ்தம்பிதமாகும் ஒன்று போக்குவரத்து. அது நகரமானாலும் கிராமமானாலும் அபிவிருத்தியை சரியாக செய்யாத நமக்கு ஏற்படும் ஒன்றுதான். ஆதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலம் மிக ஆபத்தான சூழலில் நடைபெற்று வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். 

27 December 2020

கொரோணா நெருக்கடியை வென்றெடுக்க தொழிலுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்.

மனிதனை மனிதன் சந்திக்க முடியாத, நாடுகளுக்கிடையில் நேரான தொடர்புகள் இல்லாத நிலையில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டு முற்றாக அவை ஸ்தம்பித்திருந்தன.

ஆனால் அவை ஏற்கனவே வளர்சியடைந்த தொழில்நுட்பத்தினை துணையாகக்கொண்டு மீண்டும் இந்த புதிய இயல்பு நிலையில் வளர்ந்து தொடர்ந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவற்றுக்குள் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டு பாதுகாப்பாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த பொருட்களை வாங்கவும் விற்கவும் இந்த தொழில்நுட்பம் பலவகையிலும் உறுதணையாக இருந்து வருகின்றமையை இந்தக் கட்டுரையின் ஊடாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் நாமும் நம்மை கொண்டுவரும் பொழுதே நாம் இந்த கொடிய நெருக்கடியினை வெற்றிகொள்ள முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் அறிந்த வகையில், உலகில் 2019 டிசம்பரில்தான் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் 19 ஆனது, ஒரு சில மாதங்களுக்குள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி ஏற்பட்ட பரபரப்பு மற்றும் அச்சநிலை காரணமாக நாடுகளை முடக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதனால் அந்தந்த நாடுகளின் பல வர்த்தக நடவடிக்கைகளையும் அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்த நிர்பந்தித்தன. 

20 December 2020

கோவிட்டிற்கு எதிரான போரில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்.

நாம் அம்மை நோய், டெங்கு, எலிக்காய்சல், பறவைக்காய்சல் என பல தொற்றுக்கள் தோன்றி குறுகிய காலத்தில் குறுகிய பாதிப்புக்களுடன் அவற்றை வெற்றி கண்டுள்ளோம். ஆனால் இன்று புதுவிதமாக ஆடவைத்துக்கொண்டிருக்கும் தடுப்பு மருந்துகளும் இல்லாத இன்றய நிலையில் இவற்றோடு போராட அனைத்து நாடுகளும் பல பல கோணங்களில் தம்மை தயார்படுத்தி சில நாடுகள் 'தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில்' தட்டுத்தடுமாறி இன்று பல அதிர்வான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன. இருந்தாலும் எவ்வளவு ஆயுதங்களை மனிதர்களை அழிக்க உருவாக்கி சாதித்து வந்தாலும், கொவிட்டுக்கு எதிரான இந்தப்போராட்டத்தினை எந்த ஆயுதத்தினாலும் முடக்க முடியாத ஒரு நிலையினை வளர்ந்த நாடுகளுக்கே சவாலாக்கியுள்ளமை அபூர்வமாக உள்ளது.

அந்த வகையில், நாம் அறிந்தவைதான் கடந்த 12 மாதங்களில், முழு உலகமும் 100 ஆண்டுகளில் என்றுமில்லதவாறு எதிர்கொண்ட மிகப்பெரிய தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது. 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) சீனாவில் நவம்பர் 2019 இல் உருவானது என்று ஆய்வுகள் கருத்திடுகின்றன. 2019 டிசம்பரின் பிற்பகுதியில், இந்த புதிய வகையான கொரோனா வைரஸின் விஞ்ஞான ரீதியாக ஊர்ஜிதமானது. 

19 December 2020

புதிய ஆண்டில் புதிய தொழிலுக்கு காத்திருக்கின்றீர்களா!

கொவிட் -19 தனது ஒரு வருட தாண்டவத்தினை கடந்துவிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள இந்த பொழுதுகளில் உலகம் எல்லாவகையிலும் இஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்த வகையில் பல அடிகளில் இருந்து மெதுவாக மீண்டுகொண்டிருந்த இலங்கை 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' இன்னும் ஒரு படி பின்னோக்கிச் சென்றுள்ளது. சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என முன்னேறிக்கொண்டிருந்த துறைகள் ஒரே அடியில் முடங்கிவிட்டது. கொவிட் பல பல வடிவங்களில் அதன் வீரியத்தைத் தொடர்ந்த வண்ணமுள்ள இந்த நிலையில் மலர இருக்கும் 2021 இல் எமது பொருளாதாரத்தில் 'வேலைவாய்ப்பு' அனைத்து சவால்களுக்குள்ளும் ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகின்றது.

வடகிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நவினமயமான விவசாயப் புரட்சிகளை மேற்கொண்டு எமது இளைஞர்களை ஏற்றுமதி சார் விவசாய உற்பத்தி நோக்கி தொழில் வழிகாட்டல்களை மேற்கொண்டால் நிச்சயமாக காணி அபகரிப்பு, மற்றும் வளச் சுரண்டல்களை முற்றாகப் பாதுகாக்கலாம். அத்துடன் இந்த நெருக்கடியான நிலைமை மாறி இளைஞர்கள் உளவலிமை பெறவும் உதவியாக இருக்கும். அதுவே பல புதிய கொள்கைப் பிரகடனம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்ற நிலையில், பிறக்க இருக்கும் 2021 இன் தொழில் மாற்றத்தினை அனுசரிப்பதாகவும் இருக்கும்.

14 December 2020

இடம்பெயர்தோரை திருப்பி அழைத்துவருவது 'நாட்டிற்கு உழைத்தவர்களை கௌரவிப்பதாகும்'

பல சிரமங்களுக்கும் மத்தியில் தமது  விருப்பு வெறுப்புக்களை எல்லாம் தியாகம் செய்து பலர் திரைகடலோடி அல்லும் பகலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றனர். 

ஆவர்களை பாதுகாத்து இக்கட்டான சூழலில் அவர்களை அரவணைக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவேதான், இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகக் கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் அனுப்பும் பணம் வளமையாக நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில்; (2019 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம்) இது வர்த்தக ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்க்குப் பிறகு நாட்டிற்கு இரண்டாவது பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இப்பொழுது, கொவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை எதிர்பார்கின்னர். ஆகவே இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை திருப்பி கொண்டுவரும் பணியில் உள்ள பாரிய அனுபவங்களையும் சவால்களையும் ஆராய்ந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து செல்லும் பரிந்துரைகளை வழங்குகிறது.

13 December 2020

அரசதுறை ஊழியர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனரா?

கடந்த காலங்களில் மோசமான அரசதுறை நிர்வாகமும் பயனற்ற அரசாங்கத்தின் கொள்கைகளும்; இலங்கையில் பொருளாதார வளர்ச்சியினை மந்தமடையச் செய்துள்ளன. கடந்த 66 ஆண்டுகளில், இலங்கையின் சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி கிட்டத்தட்ட 3.6% சதவீதமாகவே இருந்துவந்துள்ளது. 

இது ஒரு நாட்டின் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை. இந்த விகிதத்தில், நாட்டில் ஒரு சராசரி நபர் உண்மையான வருமானத்தை இரட்டிப்பாக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகும்  என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர். இது ஒரு நீண்டகாலமாகும், இருப்பினும், இலங்கை 7% சதவீதமாக வளர முடிந்தால், வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் காலம் 10 ஆண்டுகள்தான், அது 10% சதவீதமாக இருந்தால், அந்த காலம்7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

12 December 2020

விவசாயத்துறையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய மாற்றம்!

-S.Thanigaseelan-
இன்று கொவிட்-19 நாட்டில் விவசாயிகளை முன்னிறுத்தவேண்டியதன் அவசியத்தினை அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளது. அதனால் தான் அரசாங்கம் அதன் கொள்கையில் விவசாயத்தினை முதன்மைப்படுத்தும் வகையில் பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான சலுகைகளையும்  பரிந்துரைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து உள்ழுர் உற்பத்தியினை ஊக்குவிக்க இறக்குமதிகளையும் கட்ப்படுத்தியுள்ளது. இருந்தபோதும், 2020 அதன் இறுதி நாளை நோக்கி நகரும்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வழக்கமான அதிகரிப்பினை பொதுமக்கள் காண்கின்றனர், இது தற்போதுள்ள கொவிட்-19 ஆல் இன்னும் மோசமடையக்கூடும். இவ்வாறான நிலைமை வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஒரு மாற்று விநியோக முறையை வைக்க விவசாய அமைச்சகத்தைத் தூண்டியுள்ளது, எது எப்படி இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் தோல்வியை கண்டு வந்துள்ளமைதான் நிதர்சனம்.