ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் வெறுமனே இராணுவ
மோதல்களுக்கு அப்பால், உலகளாவிய
பொருளாதார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. போரை விடவும், ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் முக்கிய கவனப்
புள்ளியாக மாறியுள்ளது. ஈரானால் இந்நீரிணை நடைமுறையில் மூடப்பட்டுள்ளமையானது [de-facto closure by Iran], ஆசிய
நாடுகளுக்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் [crude and refined oil] விநியோகம்
நிறுத்தப்பட்டுள்ளமையால், பல நாடுகளில்
எரிபொருள் நிலையங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' [Truth Social] தளத்தில், ஈரானிய அரசாங்கம் பகைமையை நிறுத்த
அமெரிக்காவிடம் "கெஞ்சுகிறது" [begging]
என்று
உரிமை கோரியுள்ளார். ஈரானியத் தரப்பு சாதகமான பதிலைக் கொண்டுவருவதற்கு நேரம்
கொடுக்கும் பொருட்டு, பென்டகன்
முன்னர் திட்டமிட்டிருந்த ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின்
வரிசையை அவர் ஒத்திவைத்துள்ளார். இருப்பினும், ஈரான் இப்போதைக்கு இந்த அணுகுமுறைகளை நிராகரித்துள்ளதுடன், பிராந்தியத்தில் மேலும் தாக்குதல்களைத்
தொடரப் போவதாக சபதம் செய்துள்ளது. இது போரின் நடுவே சிக்கியுள்ள [caught in the crossfire] மத்திய கிழக்கு
நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நிகழ்ந்தவற்றை உற்றுநோக்குகையில், பென்டகனின் [Pentagon] போர்த் திட்டமிடுபவர்கள் ஈரானியப் போர் தொடர்பான சில
முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டனர் என்ற விமர்சனம்
வலுப்பெற்றுள்ளது. முதலாவதாக, போருக்குப்
பிந்தைய "வெளியேறும் மூலோபாயம்" [exit
strategy] வகுக்கப்படவில்லை. இஸ்ரேலுக்கு இல்லாவிட்டாலும், அமெரிக்காவிற்குச் சாதகமான விதிமுறைகளில் போரை
முடிப்பதற்கான திட்டம் முகாமைத்துவம் [management]
செய்யப்படவில்லை.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இலக்குகள் வேறுபட்டிருக்கலாம் என்ற யதார்த்தம்
கவனத்தில் கொள்ளப்படவில்லை. இரண்டாவதாக,
ஹோர்முஸ்
நீரிணை தொடர்பாக ஈரானின் நடவடிக்கைகள் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகளை
உலகெங்கிலும் விண்ணை முட்டச் செய்யும் என்பதை அவர்கள் சரியாகக் கணிக்கவில்லை.
அமெரிக்காவில் இது தேர்தல் ஆண்டாகும். எரிபொருள் நிலையங்களில் ஏற்படும்
விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு [pain
at the pumps] ஆளும் குடியரசுக் கட்சிக்குத் தேர்தல் ரீதியான பாதிப்புகளை
ஏற்படுத்தக்கூடும். மூன்றாவதாக, மோதலின்
எல்லைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஈரானின் யுரேனியம் கையிருப்புகளைப்
பெறுவது மாத்திரமே இலக்கா அல்லது வெனிசுலாவைப் போலவே ஈரானின் எரிசக்தி வளங்களும்
இலக்கில் உள்ளதா என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப்,
ஈரானில்
உள்ள எண்ணெய் நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்துத்
நெதன்யாகுவிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், அதனை மீண்டும் செய்ய மாட்டேன் என்ற வாக்குறுதியையும்
பெற்றார். உண்மையில், போருக்கான ஒரு
ஒத்திசைவான விளக்கம் அல்லது நியாயத்தை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை. மறுபுறம், இஸ்ரேல் இந்தப் போரைப் பயன்படுத்தி அண்டை
நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், அக்டோபர் 7 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பிணைக்கைதிகள் நெருக்கடியின்
வலியை அனுபவித்த பெரும்பாலான இஸ்ரேலியர்கள்,
பிரதமர்
பெஞ்சமின் "பிபி" நெதன்யாகு ஈரான் மற்றும் அதன் பினாமிகளுக்கு [proxies] எதிராகப் போருக்குச்
சென்றதை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.
ஆனால், அமெரிக்காவில்
நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. தொலைதூர ஈரானில் நடக்கும் போர் மற்றும்
அதிகரித்து வரும் இராணுவச் செலவினங்கள் குறித்து அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும், குறிப்பாக 'மேகா'
(MAGA) இயக்கத்திலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், கிட்டத்தட்ட 800 பில்லியன் டொலர்கள் வருடாந்த பென்டகன் பட்ஜெட்டுக்கு
மேலதிகமாக [annual Pentagon
Budget], மேலும் 200 பில்லியன்
டொலர்கள் [extra US$ 200
billion] நிதி ஒதுக்கீட்டைக் கோரியுள்ளமையானது,
அமெரிக்க
நிர்வாகம் போரிலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் தூண்டியுள்ளது. அமெரிக்க
திறைசேரித் திணைக்களம் [US
Treasury Dept] இந்த அதிகரித்த செலவினங்களைக் கையாள்வதில் சவால்களை
எதிர்கொள்ளக்கூடும். மறுபுறம், ஈரானும் நீண்ட
காலத்திற்குப் போர்ச் சுமையைத் தாங்க முடியாத நிலையில் உள்ளது. ஈரானின் ட்ரோன், கடல் கண்ணிவெடி மற்றும் ஏவுகணை விநியோகங்கள்
குறைந்து வருவதுடன், இஸ்ரேலிய
தாக்குதல்களால் சிவில் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியபடி, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நேரடி
அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது உண்மையில் வரவேற்கத்தக்க
முன்னேற்றமாகும் (இஸ்ரேல் இதில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை).
திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்கு [back-channel
talks] வாய்ப்பளிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிடப்பட்ட சில தாக்குதல்களை
ஒத்திவைத்துள்ளார். அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்ட பாகிஸ்தான், மத்தியஸ்தர்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது [mediated by Pakistan]. பாகிஸ்தான் இராணுவத்
தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் வாஷிங்டனில் அண்மையில் அரசுத் தலைவர்
மட்டத்திலான வரவேற்பைப் பெற்றிருந்தார். இஸ்லாமாபாத் நேரடிப்
பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு இடமாக முன்மொழியப்பட்டுள்ளது. ஈரான் இப்போதைக்கு
நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை மறுத்துள்ளது என்றாலும், கொள்கையளவில் பேச்சுவார்த்தைகளை அது
நிராகரிக்கவில்லை.
இருப்பினும்,
பேச்சுவார்த்தைகள்
வெற்றியடைய இரு தரப்பும் சில அடிப்படை நிபந்தனைகளை ஏற்க வேண்டும். ஹோர்முஸ் நீரிணை
மீதான முழு இறையாண்மையும் ஈரானுக்கு எந்தவொரு தீர்வு அல்லது அமைதி ஒப்பந்தத்திலும்
உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். மேலும், ஈரான் போர் சேதங்களுக்கான கொடுப்பனவுகள்
மற்றும் இழப்பீடுகளையும் கோருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் தனது அணு ஆயுத
அபிலாஷைகளை கைவிட வேண்டும் என்றும்,
இஸ்ரேல்
உயிர்வாழும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஈரான்
முன்னர் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக ஒரு ஃபத்வாவைக் [fatwa] கொண்டிருந்தது
கவனிக்கத்தக்கது.
இந்தப் போரின்
தூசி படிந்ததும், சம்பந்தப்பட்ட
அனைத்துத் தரப்பினரும் 2015
ஆம் ஆண்டின் கூட்டு விரிவான செயல் திட்டத்தை (JCPOA) [revival of the 2015 Joint
Comprehensive Plan of Action (JCPOA)] மீண்டும் புதுப்பிக்கும்
நோக்கில் செயல்பட வேண்டும்.
இந்த
ஒப்பந்தம் சர்வதேச அணுசக்தி முகமையின் [watchful
eye of the International Atomic Energy Agency (IAEA)] கண்காணிப்பின் கீழ்
ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு அடிப்படையில் ஒரு வரம்பை விதித்தது. அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலில் உள்ள சிலரால் முன்மொழியப்பட்ட மற்ற விருப்பம் - ஆழமான
சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள யுரேனியம் கையிருப்புகளை மீட்பதற்காக
ஈரானுக்குள் இராணுவத்தை இறக்குவது [boots
on the ground] - ஒரு மிகப்பெரிய பயங்கரமான மற்றும் விலையுயர்ந்த விடயமாக
இருக்கும். அத்தகைய ஒரு செயல்முறை உண்மையில் அவசியமாக இருக்காது என்று அமெரிக்க
வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானியப் போர்,
பென்டகனின்
வியூகத் தோல்விகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின்
அடிப்படையில், பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு இலாபகரமான
மாற்று வழிகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை நீக்குவது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை
உறுதிப்படுத்துவது மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது ஆகியவை உலகளாவிய
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானவை. போர்ச் செலவினங்கள் மற்றும் சிவில்
மக்களின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திரப் பாதையை
நோக்கி நகர்வது மாத்திரமே மத்திய கிழக்கிற்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவரும்.
போரை நீடிப்பது அழிவுக்கே வழிவகுக்கும்,
எனவே
பேச்சுவார்த்தைகளே ஒரே தீர்வு.


0 comments:
Post a Comment