ADS 468x60

04 July 2026

எல்நினோ என்றொரு மாற்றம்

கடலையும் கடந்தோம் கிழித்து

குளிர் காற்றையும் கடந்தோம் எழுந்து

கடலையும் கடந்தோம் கிழித்து

குளிர் காற்றையும் கடந்தோம் எழுந்து

மாற்றங்கள் காலத்தில் வரலாம்

அதை மாற்றிட எழுந்திடு தமிழா

மாற்றிட எழுந்திடு தமிழா


காலங்கள் பொய்தன இன்று

கோடை வானிலும் பெய்யிது இடிமழை

காலங்கள் பொய்தன இன்று

கோடை வானிலும் பெய்யிது இடிமழை

கோலங்கள் மாறலாம் குவலயத்தில்

அதை கூடியே நாமினி எதிர்த்திடவேண்டும்

கூடியே நாமினி எதிர்த்திடவேண்டும்

கடலையும் கடந்தோம் கிழித்து

குளிர் காற்றையும் கடந்தோம் எழுந்து

 

எல்நினோ என்றொரு மாற்றம்

இன்று வாழ்க்கையில் காட்டுது ஆட்டம்

எல்நினோ என்றொரு மாற்றம்

இன்று வாழ்க்கையில் காட்டுது ஆட்டம்

புல்புண்டும் வாடுது வெயிலில்

அதை புரிந்துநாம் ஆளனும் வளத்தை

புரிந்துநாம் ஆளனும் வளத்தை

 

கடலையும் கடந்தோம் கிழித்து

குளிர் காற்றையும் கடந்தோம் எழுந்து

கடலையும் கடந்தோம் கிழித்து

குளிர் காற்றையும் கடந்தோம் எழுந்து

மாற்றங்கள் காலத்தில் வரலாம்

அதை மாற்றிட எழுந்திடு தமிழா

மாற்றிட எழுந்திடு தமிழா

0 comments:

Post a Comment