ADS 468x60

12 July 2026

போதை எல்லாம் தடுக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஆடிப் பாடி குழந்தைகள்

அச்சம் இன்றி வளக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஆடிப் பாடி குழந்தைகள்

அச்சம் இன்றி வளக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும் ஓ  ஓ ஓ

[verse 2]

பிள்ளைக்காக பெற்றோர் எல்லாம்

பயந்து சாகிறான் பாரு

பெட்டிக் கடையிலும் போதை மாத்திரை

கொட்டி விக்கிறான் யாரு

பிள்ளைக்காக பெற்றோர் எல்லாம்

பயந்து சாகிறான் பாரு

பெட்டிக் கடையிலும் போதை மாத்திரை

கொட்டி விக்கிறான் யாரு

நான் அன்போட சொல்லுறத்தக் கேட்டு

நீங்க அமுதுடன் அறிவினை ஊட்டு

இந்த பொய்யான இன்பம் வாழ்நாளில் துன்பம்

பாதை மாறிப் போகாதிங்க.

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஆடிப் பாடி குழந்தைகள்

அச்சம் இன்றி வளக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும் ஓ ஓ ஓ ஓ

[verse 3]

கூடாத கூட்டம் சேந்து விட்டாலே

கோட்டில் ஏறணும் தம்பி

துருதுருப்பில்லாமல் போதையில் கிடந்தால்

தோற்றம் மாறிடும் தம்பி

கூடாத கூட்டம் சேந்து விட்டாலே

கோட்டில் ஏறணும் தம்பி

துருதுருப்பில்லாமல் போதையில் கிடந்தால்

தோற்றம் மாறிடும் தம்பி

இத எடுத்துநான் சொன்னா கசக்கும்

கொஞ்சம் ஏமாந்து போனால் உறைக்கும்

இதற்கு அறிவுரை கேட்டால் ஆயிரம் இருக்கு

மொத்தமாக விட்டுப் போடு

ஓடி ஓடிப் பிடிக்கணும் ஓ ஓ ஓ

[verse 4]

தெழிவு உள்ளவன் சொல்லுறதெல்லாம்

தெரிந்து திருந்தணும் தம்பி

பிறர் சாக நினைப்பவர் கொடுப்பதை எல்லாம்

தட்டி போகணும் தம்பி

தெழிவு உள்ளவன் சொல்லுறதெல்லாம்

தெரிந்து திருந்தணும் தம்பி

பிறர் சாக நினைப்பவர் கொடுப்பதை எல்லாம்

தட்டி போகணும் தம்பி

நல்ல குறிக்கோள் உண்டாகணும்

அதிலே கனவுகள் மெய்யாகணும்

நாம மாணவர்கெல்லாம் வாழுற வாழ்க்கை

படிப்பினைத் தந்தாகணும்

நாட்டுக்கு படிப்பினைத் தந்தாகணும்

 

[outro]

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஆடிப் பாடி குழந்தைகள்

அச்சம் இன்றி வளக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும்

போதை எல்லாம் தடுக்கணும்

ஆடிப் பாடி குழந்தைகள்

அச்சம் இன்றி வளக்கணும்

ஓடி ஓடிப் பிடிக்கணும் ஓ ஓ ஓ

 

0 comments:

Post a Comment