ADS 468x60

09 August 2026

வரும் காலம் தலைமை வா

 வரும் காலம் தலைமை வா என்று உனை அழைக்கும் ஒருமுறை

தரும் தாயின் அன்பில் போ இன்று பல தடைகள் உடையடா

உரிமைகள் வென்று துயர் களைந்து எழுதிவா கதை

முழு உலகமும் இன்று காத்துநிக்கிது சிறுவர் நம் கதை


அன்றெங்கட வெழி உலகம் அடைத்து இருந்தது 

இன்றுங்களின் புதியவழி மடை திறந்தது 

மாவாழை பழங்கள் போல வாழ்க்கை இனிப்படா 

தீப்போல திறனை வளர் அகலும் மடமையே 


குடிபோதை அடிமை எல்லாம் துரத்தி வருமுன்னை 

படிமேலே படியேறி விரட்டி நீயடி 

தொழில்நுட்பம் தொடர்கல்வி உனது வேலைடா 

பழிபோடும் நபர் கண்டால் விலகிச் செல்லடா


0 comments:

Post a Comment