செங்கற்கள் மற்றும் கட்டிடங்களுக்கு அப்பால்: இலங்கையில் மனித மூலதனம் மற்றும் நிதி மீள்திறனுக்கான மூலோபாய உந்துசக்தியாக மாணவர் உட்கட்டமைப்பு
"எதிர்காலத்தில் முதலீடு செய்ய
விரும்பினால், மக்களில்
முதலீடு செய்யுங்கள். மக்களில் முதலீடு செய்ய விரும்பினால், கல்வியில் முதலீடு செய்யுங்கள்.
கல்வியில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்குத் துணைபுரியும் சூழலில் முதலீடு
செய்யுங்கள்."
நீண்டகாலப்
பொருளாதார அபிவிருத்தியின் அடிப்படையான தத்துவார்த்த முன்நிபந்தனை யாதெனில்,
ஒரு தொலைநோக்குடைய அரச முதலீடானது மனித
மூலதனத்தையும் (Human Capital), அதனை
நிலைநிறுத்தும் பௌதீகச் சூழலியல் அமைப்புகளையும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்
என்பதாகும். தெற்காசியாவின் அபிவிருத்தியடைந்து வரும் சமூகப் பொருளாதாரப்
பின்னணியில், கல்விக்கான
முதலீடே ஒரு நாடு மேற்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த கட்டமைப்பு முதலீடாகும். எனினும்,
இம்முதலீட்டின் வினைத்திறனானது, மாணவர்களுக்கான போதிய பௌதீக வளங்களை,
குறிப்பாகப் பாதுகாப்பான வசிப்பிடங்களை
வழங்குவதில் நேரடியாகத் தங்கியுள்ளது. இலங்கையின் உயர்கல்வித் துறையானது, மாணவர் விடுதி வசதிப் பற்றாக்குறை
என்னும் கடுமையான கட்டமைப்பு வீழ்ச்சியால் பல தசாப்தங்களாக முடங்கியுள்ளது.