களுவாஞ்சிகுடி எங்கள் மட்டக்களப்பின் மடி
காண்போரின்நொடி என்றும் களிப்பான படி
களுவாஞ்சிகுடி எங்கள் மட்டக்களப்பின் மடி
காண்போரின்நொடி என்றும் களிப்பான படி
களுவாஞ்சிகுடி களுவாஞ்சிகுடி
காலமெல்லாம் தமிழ் இனிக்கும் களுவாஞ்சிகுடி
களுவாஞ்சிகுடி களுவாஞ்சிகுடி
காணும் எங்கும் சேவை தரும் களுவாஞ்சிகுடி
வர்த்தகங்கள் வளர்ந்தோங்கும் வாணிபத்தின் தலை
வந்தோரையும் வாழவைக்கும் அன்பிலுயர் மலை
அர்தமுள்ள தமிழ்மணக்கும் கல்வியிலே புகழ்
ஆறுகடல் சூழஎழில் இன்பம் நாழும் அகழ்
களுவாஞ்சிகுடி களுவாஞ்சிகுடி
பூர்வீக அரசன் ஆண்ட களுவாஞ்சிகுடி
களுவாஞ்சிகுடி களுவாஞ்சிகுடி
பட்டிருப்பு மண்ணின் தலை களுவாஞ்சிகுடி
திணைக்களங்கள் சேவைதரும் முனைப்புடைய ஊரு
அனைத்து மக்கள் கூடிவரும் அடைக்கலத்தின் பேரு
தலைமைதன்னில் முதன்மைபெற்ற தமிழனுறை நாடு
தானமொடு கண்ணகைக்கு தமிழ் அளித்த வீடு


0 comments:
Post a Comment