- சமூகத்தின் மறைமுக வரி (Social Regressive Tax): சட்டப்பூர்வ மதுபானத்தின் மீதான
அதீத வரி விதிப்பு முகாமைத்துவமே (Taxation Management), மலிவான, நச்சுள்ள கசிப்பை நோக்கி ஏழைகளைத்
தள்ளும் ஒரு மறைமுகமான மற்றும் கொடூரமான சமூக வரியாகச் (Social Regressive Tax) செயல்படுகிறது.
- கண்ணியத்தின் இழப்பு: வென்னப்புவ (Wennappuwa) பகுதியில் இடம்பெற்ற ஐந்து பேரின்
உயிரிழப்புக்கள், வெறுமனே மதுப்பழக்கத்தின் விளைவல்ல; மாறாக, உழைக்கும் மக்களின் நிதி
நெருக்கடியும் (Financial Distress) பொருளாதாரத் தன்னிச்சையும் (Economic Discretion) அவர்களின் உயிர்க்கான கண்ணியத்தைக்
குலைக்கும் தீவிரமான பிரச்சினையின் பிரதிபலிப்பாகும்.
- அமைப்பியல் குறைபாடு: கசிப்பு வர்த்தகத்தை விநியோகித்த
பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டவிரோத வலையமைப்பை வளர்க்கும் பொருளாதாரக் கொள்கைக் குறைபாடுகள்
மீதான பொறுப்புக்கூறல் இல்லாமல், இந்தத் துயரச் சங்கிலியை ஒருபோதும் உடைக்க முடியாது.
- உலக சுகாதார எச்சரிக்கை: உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, சட்டவிரோத மதுபானங்கள் பெரும்பாலும் மெத்தனால் போன்ற உயிருக்கே ஆபத்தான நச்சுகளைக் கொண்டிருப்பதால், இவற்றைத் தடுத்தல் என்பது சட்ட அமுல்படுத்தலை விட, பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகவே முதலில் அணுகப்பட வேண்டும்.
07 January 2026
கசிப்பு அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழப்பு: அது சொல்லும் சேதி என்ன?
06 January 2026
31 வயதுடைய கணித ஆசிரியை, தான் பணிபுரிந்த பாடசாலையில் இரண்டு மாணவர்களுடன் தகாத உறவு
"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆன்றோர்கள் வரிசைப்படுத்திய அந்தப் புனிதமான உறவுமுறையில், பெற்றோருக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள். ஆனால், வேலியே பயிரை மேய்ந்தால் விளைச்சல் ஏது? என்ற கேள்வியுடன், நெஞ்சை உலுக்கும் ஒரு செய்தியை மையமாக வைத்து இன்று உங்களோடு பேச விழைகிறேன்.
கல்வி என்பது இருளை நீக்கும் ஒளி; ஆசிரியர்கள் அந்த ஒளியை ஏற்றும் மெழுகுவர்த்திகள். ஆனால், அந்த மெழுகுவர்த்தியே இன்று ஒரு சில இடங்களில் தீப்பந்தமாக மாறி, மாணவர்களின் எதிர்காலத்தைச் சுட்டெரிக்கும் அவலத்தைக் காணும்போது இதயம் கனக்கிறது.
03 January 2026
2026 பூகோளப் பொருளாதாரம்: அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் உள்ளது, ஆனால் அத்திவாரம் பலவீனமானது.
உலகப் பொருளாதாரம் இந்த அதிர்ச்சிகளைத் தாங்கும் ஒருவித "மீள்தன்மையை" (Resilience) வெளிப்படுத்தியிருந்தாலும், அதன் அடிப்படை அத்திவாரம் இன்னும் பலவீனமாகவே உள்ளது.
01 January 2026
ஆழம் தேடும் இளமையின் விழித்திரை!
"நேரம் என்பது நொடிகளில் கடப்பது அல்ல; அந்த நேரத்தில் என்ன உணர்ந்தோம், என்ன சாதித்தோம் என்பதே!"
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத ஒரு பெரும் சவாலை, எங்கள் இளைஞர்கள் சமூகம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. உலகில் அதிக கனவுகளைச் சுமந்து, தங்கள் வாழ்வை நகர்த்தும் கூட்டம் எங்கள் இளையோர் கூட்டம் தான். இவர்களின் இமைக்கா நொடிகள் இதயங்களையும், இமயங்களையும் நோக்கிய வண்ணமாகவே உள்ளன. மாற்றங்கள் விரும்பும் உலகில், மாற்றத்தின் துளிர்கள் இந்த இளைஞர்களே என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலர்ந்திருக்கும் 2026 புதிய வருடம் கடந்து வந்த ஆண்டிலிருந்து நாம் முயற்சி பெறுவதற்கான, மீண்டெழுவதற்கான, வெற்றிகளைச் சுவைப்பதற்கான ஒரு ஆண்டாக
அமையும் என்ற உறுதியான நம்பிக்கையில் இன்று உங்கள் அனைவரோடும் எனது புத்தாண்டு
வாழ்த்துக்களைப் பகிர வந்துள்ளேன்.
பொருளாதார
ரீதியாகவும், வேறு பல சவால்களாலும் பல பின்னடைவுகளைக்
கொண்டு தந்த 2025 ஆம் ஆண்டினை, நாம் உண்மையில் துயரத்துடன் அல்லாமல், அதன் அனுபவங்களிலிருந்து பாடம்
கற்றுக்கொண்டு, அதை ஒரு பலமான அடித்தளமாக மாற்றிய
மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும். அதேபோன்று, அவ்வாறான ஒரு சவாலான ஆண்டிலிருந்து புதிய
ஆண்டு எங்களுக்கு வருகின்ற பொழுது, மனதார ஒரு துயரமான ஆண்டிலிருந்து ஒரு மகிழ்ச்சியான ஆண்டில் காலடி எடுத்து
வைக்கின்றோம் என்கின்ற நேர்மறை எண்ணம் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஆழமாக வேரூன்ற
வேண்டும்.
எல்லா
சவால்களையும் மீறி, அவற்றை எதிர்த்து நின்று கடந்து வந்து, இன்னமும் தளராமல் மீண்டெழுகின்ற சக்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம்.
இந்தப் புதிய ஆண்டில், அந்தச் சக்தியை இன்னும் பலமடங்கு
கூட்டிக்கொண்டு, விழுந்த இடத்தில் இருந்து சிறகடித்துப் பறக்கும் குஞ்சுகள் போன்று, இந்த 2026 ஆம் ஆண்டில் பரந்த வானத்தில் மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் பறந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
உங்கள்
ஒவ்வொருவரின் வீடுகளிலும், வாழ்விலும் சந்தோஷம் பொங்கட்டும்!
புதிய
முயற்சிகளும், நேர்மறை எண்ணங்களும், மீண்டெழும் சக்தியும் நிறைந்த ஒரு வெற்றி ஆண்டாக 2026 அமைய உளமார வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் S.T.Seelan



