சின்னச் சின்னப் பாலகன்
வண்ண வண்ண மயிலினில்
அங்கும் இங்கும் பால் மணலில் ஆடுறான்- அவன்
இங்கிருக்க யாரை எண்ணி பாடுறோம்
சின்னச் சின்னப் பாலகன்
வண்ண வண்ண மயிலினில்
அங்கும் இங்கும் பால் மணலில் ஆடுறான்- அவன்
இங்கிருக்க யாரை எண்ணி பாடுறோம்
துள்ளி ஓடும் வாவியில்
பள்ளி கொள்ள மரத்தடி
வெள்ளி வேலன் வந்தமர்ந்தானே அதில்
அள்ளி அருள் தந்தமர்ந்தானே
(Repeat it]
துள்ளி ஓடும் வாவியில்
பள்ளி கொள்ள மரத்தடி
வெள்ளி வேலன் வந்தமர்ந்தானே அதில்
அள்ளி அருள் தந்தமர்ந்தானே
துள்ளி ஆடும் மீன்களும்
பள்ளி கொள்ள வேலவன்
வெள்ளி நிலா சொந்தம்தேடுதே
அது அள்ளி அள்ளி ஒளியை வீசுதே
[Repeat]
துள்ளி ஆடும் மீன்களும்
பள்ளி கொள்ள வேலவன்
வெள்ளி நிலா சொந்தம்தேடுதே
அது அள்ளி அள்ளி ஒளியை வீசுதே
சின்னச் சின்னப் பாலகன்
வண்ண வண்ண மயிலினில்
அங்கும் இங்கும் பால் மணலில் ஆடுறான்- அவன்
இங்கிருக்க யாரை எண்ணி பாடுறோம்
தமிழன் கண்ட தலைவனை
தலை குனிந்து வணங்கினால்
புலமை எல்லாம் அள்ளி வீசுவான் அவன்
இழமையோடு உன்னை மாற்றுவான்
[Repeat]
தமிழன் கண்ட தலைவனை
தலை குனிந்து வணங்கினால்
புலமை எல்லாம் அள்ளி வீசுவான் அவன்
இழமையோடு உன்னை மாற்றுவான்
யாம் இருக்க பயமில்லை
ஓம் முருகன் ஜெயமுண்டு
செந்தில் நாதன் முந்தி வருவான் எமை
சேர்ந்த பகை பாய்ந்து ஓடுமே
[Repeat]
யாம் இருக்க பயமில்லை
ஓம் முருகன் ஜெயமுண்டு
செந்தில் நாதன் முந்தி வருவான் எமை
சேர்ந்த பகை பாய்ந்து ஓடுமே
சின்னச் சின்னப் பாலகன்
வண்ண வண்ண மயிலினில்
அங்கும் இங்கும் பால் மணலில் ஆடுறான்- அவன்
இங்கிருக்க யாரை எண்ணி பாடுறோம்
சின்னச் சின்னப் பாலகன்
வண்ண வண்ண மயிலினில்
அங்கும் இங்கும் பால் மணலில் ஆடுறான்- அவன்
இங்கிருக்க யாரை எண்ணி பாடுறோம்


0 comments:
Post a Comment