ADS 468x60

28 September 2025

நல்லவழி காட்டு வந்து முருகா முருகா

நம்பி வந்தேன் காலடிக்கு முருகா முருகா

நானிருக்கும் நிலை அறிவாய் முருகா முருகா

வெம்பி மனம் வாடுகின்றேன் முருகா முருகா

வேதனையை நீ அறிவாய் முருகா முருகா


கும்பிடவும் மனம் இல்லை முருகா முருகா

கூப்பிடவும் விருப்பம் இல்லை முருகா முருகா

சொல்ல ஒரு மனிதன் இல்லை முருகா முருகா

சோகம் நெஞ்சில் உறைகிறதே முருகா முருகா


நல்லவழி காட்டு வந்து முருகா முருகா

நாதி அற்றுப் போகாமல் முருகா முருகா

வெல்லவொரு திறமை உண்டு முருகா முருகா

வேலெடுத்து கையில் கொடு முருகா முருகா

0 comments:

Post a Comment