ADS 468x60

06 September 2025

வண்ண வண்ண யுவசிறீ

வண்ண வண்ண யுவசிறீ

சின்னக் கண்ணன் யுவசிறீ

இங்கும் அங்கும் மானைப் போல துள்ளது- அது

இனிக்க இனிக்க தேனைப்போல அள்ளுது


மட்டு நகரில் வாவிபோல்

வளைந்து நெழிந்து போகிறாள்

பாடும் மீனை பாட்டில் வெல்கிறாள் - அவள் 

பாட்டை கேட்டு ஆட்டம் போடுறாள்

அன்னம் போல நடக்கிறாள்

கன்னம் ரெண்டும் கொடுக்கிறாள்

மின்ன மின்ன புன்னகைக்கிறாள்- அவள்

வண்ண மகள் சின்னக் கண்மணி


சின்னக் கண்ணன் யுவசிறீ

இங்கும் அங்கும் மானைப் போல துள்ளது- அது

இனிக்க இனிக்க தேனைப்போல அள்ளுது


எங்கள் தங்கம் யுவசிறீ

என்றும் சொல்லும் யுவசிறீ

மன்றம் ஆளும் நாட்டின் அரசியாம்- அவள்

மாசத்திலே குளிரும் மார்களி

சிணுங்கி சிணுங்கி வருகிறாள்

செல்லம் காட்டி மறைகிறாள்

உள்ளமெல்லாம் உறவு கொள்கிறாள்- அவள்

வெல்லம் போல நாவில் இனிக்கிறாள்

 

0 comments:

Post a Comment