தினனான தின்னானா
தின்னானா தின தின்னானா
தினனா தென் னாதின தெந்தின
தின்னானா தின தின்னானா
கொம்புச் சந்திப் புள்ளயாரே
அன்புத் தம்பி வேல்முருகன்
கோயிலை கட்டிக் குடிபோக
குறைகள் இல்லாமக் காப்பாயே
ஸ்ரீ பால முருகோனே
செந்தில் நாதனே மால் மருகா
உன்பதி தேடியே நாம் விரைந்தோம்
பால் மணல் மேட்டினில் வாருமையா
கலை கொஞ்சும் தேனூரில்
கற்பகமே உந்தன் பொற்பதத்தை
விலையில்லா மாணிக்கமே உனை
தலை மேலே கும்பிடுவேன்
கலை கொஞ்சும் தேனூரில்
கற்பகமே உந்தன் பொற்பதத்தை
விலையில்லா மாணிக்கமே உனை
தலை மேலே கும்பிடுவேன்
கும்பாபிஷேகமும் வந்ததய்யா
கோல மயில்மீது வாருமய்யா
அன்பருக் கன்பராய் ஆனவரே
ஆனை முகனுக்கு இளையவனே
சூடுபோட போகக்குள்ள அந்த
காடக் கடக்க வேல்முருகன்
கோயில் வருகும் குறுக்கில
கொண்டு போகணும் தேங்காயொன்று
சூரன் போருக்கு மாவிலையும்
சூடான கப்பு தேத்தண்ணியும்
கூட எடுத்துப் போகவேணும்
குமரன் படைக்கு வேணுமென்பாய்
தினனான தின்னானா
தின்னானா தின தின்னானா
தினனா தென் னாதின தெந்தின
தின்னானா தின தின்னானா
[verse 8]
கொச்சிக் காலைக்க போகோணும்
நம்ம கும்பாபிஷேகம் சாத்தியமா
வச்ச வேலைகள் அப்படியே
வாடிக் கிடக்குப் போடிபுள்ள
கொச்சிக் காலைக்க போகோணும்
நம்ம கும்பாபிஷேகம் சாத்தியமா
வச்ச வேலைகள் அப்படியே
வாடிக் கிடக்குப் போடிபுள்ள
தினனான தின்னானா
தின்னானா தின தின்னானா
தினனா தென் னாதின தெந்தின
தின்னானா தின தின்னானா
[verse 9]
வேலையெல்லாம் வைத்துவிட்டு
வேளைக்குப் போகணும் வாடிபுள்ள
காலைக்க போகலாம் வேறொருநாள்
கந்தனைக் காண்பது எப்போது
வேலையெல்லாம் வைத்துவிட்டு
வேளைக்குப் போகணும் வாடிபுள்ள
காலைக்க போகலாம் வேறொருநாள்
கந்தனைக் காண்பது எப்போது
தினனான தின்னானா
தின்னானா தின தின்னானா
தினனா தென் னாதின தெந்தின
தின்னானா தின தின்னானா
தினனான தின்னானா
தின்னானா தின தின்னானா
தினனா தென் னாதின தெந்தின
தின்னானா தின தின்னானா
0 comments:
Post a Comment