
31 December 2018
இப்படியா கொண்டாடணும் புதுவருடம்

25 December 2018
சிலருக்கு பதவிப் பிரச்சினை பலருக்கு உதவிப்பிரச்சினை!

ஐயா! இது பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் இந்தக் காலத்தில் உறவினர்களைப் பார்க்க செல்லலாம், பெற்றோர்களைப் பிள்ளைகளும் பிள்ளைகளை பெற்றோர்களும் என பார்க்கச் செல்லலாம். இவர்கள் எல்லாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப்ப, சாதாரண வஸ் மற்றும் புகையிரதங்களிலே பயணம் செய்து வரும் நிலையில், இந்த அழுத்தம் சொகுசு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் செம்மையாகச் செல்லும் அரசியல்வாதிகளை உங்கள் வேலை நிறுத்தம் எவ்வாறு பாதிக்கும்??
23 December 2018
ஒற்றைத்துளி

ஓராயிரம் பாரம்தனை வீசவெனக் காவும்
பெட்டையிடும் முடடையினை பேரெடுக்க கூவும்
கடடைதனில் மந்தியெல்லாம் மறுகிழைக்கு தாவும்
நீ கூவவும் தாவவும் பிறந்தவனல்ல-தமிழ்
தாயையும் தமிழயும் மறந்தவனல்ல
சேவைக்கு பயந்து இறந்தவனல்ல
ஒற்றைத் துளியாய் இரு
வெள்ளமாய் வரும் படை பின்னால்
வேங்கயாய் உடை தடை முன்னால்
18 December 2018
கேவலமான மனநிலையும் கேள்விக்குறியாகும் இளைஞர்களும்

''வா மச்சான் இரு இப்படி, அதுசரி இப்ப உண்ட பிள்ள என்ன மச்சான் செய்யுறான்? என்று ஒருவர் கேட்க, மற்றயவர் ''என்னத்த மச்சான் போண் ஒண்டு இருக்கு, மற்றது கிரிக்கட் மட்ட அதை தூக்கினான் எண்டா பொழுதுபடத்தான் திரும்ப வீட்டுக்கு வாறான். எவ்வளவோ சொல்லிப் பாத்தன். அடே விளையாடினாலும் வெல்ல விளையாட வேணும்டா என்று. கேட்டானா? எத்தனையோ கோஸ் இருக்கு படிக்க, ஆனா அவன் இதையெல்லாம் கேட்டபாடில்லை மச்சான்'' என்று வருந்திக்கொண்டார்.
இது இன்றய பெற்றோரின் நிலை.
15 December 2018
சுட்டிக்காட்டாமல் விடப்படும் பெரிய குறையொன்று
தேத்தாத்தீவு கிராமத்தின் கிழக்கே இருக்கும் வங்கப் பெருங்கடல் அதுபோல் மேற்கே இருக்கும் மட்டக்களப்பு வாவி ஆகிய இரண்டும் முக்கியமான பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. இதில் கிழக்கே இருக்கும் கடற்கரைவரை செல்லும் பிரதான பாதை "சுனாமிக்குப் பின்னர் மிக மிக மோசமடைந்து தூர்ந்து போயுள்ளது".
12 December 2018
பிராணிகளின் மரணங்களும் திராணியற்ற மனிதர்களும்!

02 December 2018
தம்பி ரமேஸ்!
நான் எப்பவோ எழுத நினைத்தது இன்று எழுதுகின்றேன். ஒருவர் பயன் கருதாமல் செய்வதும் பயன் கருதிச் செய்வதும் என இரு செயல்கள் உள்ளது. இரண்டும் கலந்த ஒரு கலவை மற்றும் மாற்றத்துக்கான புதிய அத்தியாயமாக தம்பி ரமேஸ் அவர்களைப் பார்க்கின்றேன். அவர் ஒரு ஆசிரியராக இருந்து மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றம், இன்றய மாணவர்களின் சந்தைக்கான கல்வியின் தேவையை அறிந்த, வேலைவாய்ப்புக்கான படையின் தலைவனாய் உன்னைப் பார்க்கின்றேன். இதை படித்தாலும் பலர் புரிய நாள் எடுக்கலாம்.
01 December 2018
திருமேனி உலகுயர் கணபதியே
கலியுகப் பெருமானே காத்தருள் புரியும் தேனூர்ப் பதியப்பா
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
25 November 2018
இலங்கை அரசியலில் உருவெடுக்கும் மூன்றாவது சக்தி!

நாட்டின் யு.என்.பி மற்றும் எஸ்.எல்.எப்.பி ஆகிய இரு பெரும்பாண்மை கட்சிகளுக்கும் இருந்து வந்த மதரீதிhன மற்றும் இனரீதியான ஆதிக்க வாக்கு வங்கியில் அவர்களது நேர்மையின்மை, உண்மைத்தன்மை இழப்பு காரணமாக மக்களிடத்திருந்து எதிர்மறையான அபிப்பிராயத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலமை இப்பொழுது ஜனத்தா விமுத்தி பெரமுனைக்கு பெரும்பாண்மை மக்களிடையே தோன்றியுள்ள இடைவெளியை நிரப்பவதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.
24 November 2018
வயல்காரன்!

உழுதிய விழைநிலத்தின்
புழுதியில் விதையாக்கி
வியர்வையில் தழையாகி
மழையினில் பயிராக்கி
பசியினில் வயிராறும்
படியரிசின் சொந்தக்காரன்!
22 November 2018
ஏறுமுகமான வாழ்க்கைச் சுமை, இறங்கு முகமான இலங்கையின் பணப் பெறுமதி

இன்று இலங்கையின் மிகப்பிரதான பிரச்சினைகளாக ரூபாவின் விலைக்குறைவு மற்றும் எண்ணை விலையின் அதிகரிப்பு என்பன விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அதில் இந்த ரூபாவின் மதிப்பு குறைந்திருப்பது பாரிய குழப்படியினை மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது இவை பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.. எமது நாட்டின் வரலாற்றில் 1948ம் ஆண்டில் ரூபாயினுடைய நாணய மாற்று விகிதமானது 4.76 ஆகக் காணப்பட்டது. ஆயினும் அந்த நாணய மாற்று விகிதத்தை நீண்ட நாட்களிற்கு காப்பாற்ற முடியவில்லை. 1977ம் ஆண்டிற்கு முன்னர் ரூபாய் மதிப்பினை அவ்வப்போது மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் வெளிப்பாய்ச்சலை கட்டுப்படுத்தி அதனூடாக இறக்குமதி மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தினர்.
20 November 2018
பிட்டும் தேங்காப்பூவுமாய் = களுதாவளை + தேத்தாத்தீவு

களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையார் சந்நிதானம் சென்றுபாருங்கள். பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மதுரை மரக்கீற்று மண்ணைத் துடைக்கும், தாமரை பூத்து இருமருங்கும் சாமரம் வீசும், பசுமாட்டுப் பட்டி அழகுசேர்க்க, மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும்.
இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, வாவியின் ஓரத்தில் சலசலவென வயலின் ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவை தனித்தனியாக இருந்திருந்தால் கற்பனை பண்ணி இரசிப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும். அது போல்தான் இன்று ஒரு பெரிய நிகழ்வில் களுதாவளை கிராமத்தவர் எமது தேத்தாத்தீவு கிராமத்தினையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது ஒரு அழகு, பெருமை, மகிழ்ச்சி.
எல்லாராலும் இதைப் பண்ண முடியாது- அமரர் ஊர்தி சேவை.
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
எல்லாராலும் இதைப் பண்ண முடியாது அதுக்கு ஒரு மனசும் சேவை செய்யும் இதயமும் தேவை. அதனால் திருப்தியடைகின்ற ஒரு சேவகரைப்பற்றி எழுதியே ஆகணும். இன்றய நவீன பரபரப்பான உலகில் யாரையும் யாரும் கவனிக்காத அல்லது கண்டுகொள்ளாத நிலையிலேயே வாழ்க்கையைப் பழக்கிக் கொள்ளுகின்றனர். ஒருத்தருக்கொருவர் ஒத்தாசையாய் தமது நேரத்தினை பணத்தினை செலவு செய்த காலம் இன்று இல்லாமல் போயுள்ளது. அதுபோக இன்னொருவர் செய்யும் நல்லவற்றை முகப்புத்தகத்தில் கூடியிருந்து குறைகூறும் மக்களிடையே இவற்றை மனத்தயிரியத்துடன் முன்னெடுப்பதென்பது பாராடடுதற்குரியது.
15 November 2018
இலங்கைக்கான புதிய ஆட்சி முறையின் தேவைப்பாடும், அணுகுமுறைகளும்.
இன்று இந்தச் சூழலில் நமது நாட்டிற்கு தேவையாக இருப்பது, எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வெளியில் மீதமுள்ள காலத்தில் குறித்த உடன்பாடுகளுடன் சமமாக செய்யும் ஆட்சி முறை (bi-partisan) ஒன்றுதான். இந்த முறையில் நாட்டின் தலைவர் உட்பட எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்குகொண்டு ஒரு தேசிய அமைச்சரவை கௌன்சிலை (The National Council of Ministers) ஸ்த்தாபித்து அதல் 25 கபினற் அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள 14 மாதங்களையும் நாட்டை நல்ல முறையில் நடாத்திச் செல்வது இன்று சாலப் பொருத்தமாக இருக்கும். இதில் பிரதி அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இருக்க மாட்டார்கள். இந்தக் காலத்தில நீண்டகால எமது நாட்டின் மற்றும் எமது மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் செயற்படவேண்டும்.
14 November 2018
இன்று இலங்கையில் நடக்கப் போவது என்ன?
இன்று மகிந்த அணிக்கு இருக்கும் பலம் மக்கள் செல்வாக்கு, ரணில் அணிக்கு இருக்கும் பலம் பாராளுமன்ற செல்வாக்கு.
மகிந்த பாராளுமன்றம் சென்றால் வெல்ல முடியாத நிலையும் ரணில் மக்களிடம் சென்றால் தோற்றுப் போகும் நிலையும் காணப்படுகின்றது.
மகிந்த பாராளுமன்றம் சென்றால் வெல்ல முடியாத நிலையும் ரணில் மக்களிடம் சென்றால் தோற்றுப் போகும் நிலையும் காணப்படுகின்றது.
11 November 2018
வடகிழக்கில் பெண்களின் அரசியல் நுழைவு- காலத்தின் தேவை
09 November 2018
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

05 November 2018
நாம் தட்டிக்கேட்கும் ஆழுமைப்பண்பு இல்லாத சமுகத்தை படைத்துள்ளோம்!
நாம் சிறுவயது முதலே மாணவர்களிடையே எமது சூழலை பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்களை விதைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அவற்றை பிரயோகப்படுத்த கற்றுக்கொடுக்கவும் வேண்டும். எமது பாரதூரமான சூழல் பிரச்சினை நமக்கு சேய்மையில் இல்லை, அவை மிக மிக அண்மையிலேயே உள்ளது. நாம் இன்று விதைப்பவைதான் நாளை முளைத்து பயன்தரும். அதனை அடிப்படையாகக்கொண்டு மரம் நடும் நல்லெண்ணத் திட்டத்தினை பாடசாலை, கிராம மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மண்டூர் 40ம் கொலணி கிராம பாடசாலை வளாகத்துள் நடைமுறைப்படுத்தி வைத்த வேளை!
04 November 2018
பாதிக்கப்பட்ட மக்களிடையே நுண்ணறிவை வளர்க்கும் நூலகத்திட்டம்
'இன்று வாசிப்பவர்களே நாளைய தலைவர்களாகின்றனர்' என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப நாளைய தலைமுறைகளை இன்றே உருவாக்கும் நுண்ணறிவினை வளர்க்கும் நூலகத்திட்டம் இலங்கை மற்றும் அவஸ்த்திரேலிய விருதுபெற்ற மாணவர் சங்கத்தினால் (Sri Lanka Australia award alumina association ) மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயத்தில் அமைந்துள்ள மண்டூர் 40, ஜீ.ரி.எம் பாடசாலைக்கு ஒரு தொகை நூலகத்துக்கான தளபாடங்களும் மாணவர்களுக்கான புத்தகங்களும் 3.11.2018 அன்று அந்தப் பாடசாலையில் வழங்கிகைப்பப்பட்டது. மட்டக்களப்பில் இத்திட்டத்தினை இந்த அமைப்பின் உறுப்பினரான சி.தணிகசீலன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைக்கான புதிய நூலகம் திறப்பு வைபவத்துடன் இந்தப் பாடசாலையை பசுமையாக்கும் நல்லநோக்கத்துக்கான ஆரம்ப கட்டமாக பலவகை பயன்தரும் மரங்கன்றுகள் நடப்பட்டு மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பாங்கினை வளர்பதற்கான ஊக்குவிப்பு செயற்பாடாகவும் இது அமைந்திருந்தது.
28 October 2018
தனது தலையில் நெருப்பு வைக்கும் சமுகம்!

24 October 2018
19 October 2018
இது தெரியாமல் எத்தனை பேரடா இருக்கிறீர்கள்?

வயல் கீற்றும்
தாவும் மந்தியும்
தங்கிச்செல்லும் பறவையும்
மேவ ஒரு இடமுண்டோ
வானோர் தங்குமிடமோ
என மெச்சும் தேனுர்
இது எங்க ஊரு....
14 October 2018
நீயே உனக்கு என்றும் நிகரானவள்!
மனசு உடைஞ்சு போனது
மாதா மறைந்த சேதி கேட்டு
கல்லை உடைத்து உடைத்து
சிலைகள் படைத்து படைத்து
கற்பக் கிரகங்களில் காட்சி
கரங்கள் குவிக்க வைப்பதில்லையா!
நீயும் ஒரு அழகிய சிலை!
வேதனம் மலிந்து வேதனை அதிகரிக்கும் தேயிலை தொழிலாழர்களுக்கான போராட்டங்கள்!

எமது எதிர்கால விவசாயத்தின் அபிவிருத்தித்தேவை!
எமது எதிர்கால விவசாய அபிவிருத்தியின் தேவை, அவற்றில் ஏற்படும் மாற்றம் அவற்றுக்கான தந்திரோபாயங்கள் என்பன பற்றிய எனது உரையாடல் ஒலி ஒளிப் பதிவொன்று.
10 October 2018
சாரல் மழை ஒரு பக்கம் காரல் மழை மறுபக்கம்
இப்பொழுது மட்டு மண்ணின் கரையோரங்களில் உள்ள கரைவலை பாடுகள் உள்ள ஊர்களில் சிறியரக மீன்கள் அள்ளா கொள்ளையாக பட்டு நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மக்கள் அவற்றை உண்ணுவதற்கு வாய்ப்பாக உள்ளது, ஏனெனில் பெரிய மீன்கள் பட்டால் பொரியலுக்கும் கிடைக்காமல் அவ்வளவு மீன்களையும் மாற்றான் உண்டுமகிழ ஏற்றிவிடும் நடைமுறை, எமது வளத்தைப் பயன்படுத்தி நாம் நிறைவு காணமுன் ஏற்றுமதி செய்யும் நிலை நிறுத்தப்படனும்.
07 October 2018
அனர்த்தங்களில் நலிவுறும் நிலையை முகாமை செய்வதே வறுமைக் குறைப்புக்கான மூலோபாயம்.

உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.
05 October 2018
மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்
என்னை ஏற்றிய எல்லா குருமாருக்கும் ஆசிாியா் தின வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களே!
கடல் போன்ற அறிவை- சிறு
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!
04 October 2018
பேருக்கு ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் பேராசிரியர்களாக சிலரே இருக்கின்றனர்.

குறைந்து வரும் நாணய மதிப்பும் குழம்பிக்கிடக்கும் குடிமக்களும்- ஒரு சமகால ஆய்வு
30 September 2018
எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் முயற்சியாண்மை விஸ்த்தரிப்பின் தேவையும்.
24 September 2018
மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது
23 September 2018
22 September 2018
இலங்கை தற்கொலை செய்து இறப்பவர்களின் நாடுகளின் பட்டியலில் முன்னணியில்

உலகின் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் முக்கால்வாசி தற்கொலைகள் அல்லது அதற்கான முயற்சிகள் நடுத்தர அல்லது ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே இடம் பெற்று வருகின்றது. அவை கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 800,000 என உலக சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது. இது மொத்தமாக வேறு காரணங்களால் இறக்கின்றவர்களில் இருந்து 1.4 விகிதமாகும். இலங்கையின் சமுக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மூலமான செய்திகளினடிப்படையில் இந்த தற்கொலை அல்லது அதற்கான முயற்சி அதிகரித்துக்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
13 September 2018
அடிப்படை மக்களை ஆக்கிரமிக்கும் எரிபொருள் விலைச் சூத்திரம்!

நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு பொருளாக இந்த எரிபொருட்கள் இரண்டறக்கலந்துள்ளன அதனால் இவை இல்லாத வாழ்க்கையினை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. இது எமது நாளாந்த வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து விடயங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பது வெளிப்படை. நாளாந்தம் கடினமாக வேலை செய்து அன்றாட உணவுக்காக உழகை;கும் மக்களின் நிலையினை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் ஏற்கனவே நலிவுற்ற மக்களை இன்னும் ஒரு படி மேலாக சென்று வலுவிழக்கச் செய்யும் என்பதில் இல்லை ஐயம்.
11 September 2018
மாற நினைத்தால் மாறலாம்!
பாருடா இவன, இப்ப நல்ல வேலை ஒன்று கிடைச்சிருக்காமே!, ம்ம்ம்ம் இவர் கிடந்த கிடை எங்களுக்கு தெரியாதா! அந்தக் காலத்தில கழிசன் போடயும் காசில்லாம கெடுடந்ததுகளுக்கெல்லாம் டை கோட்ஸ் வேற, அப்பாக்கா கறல்புடிச்ச சயிக்கிளில திரிஞ்சதுகளுக்கு காறு ஒரு கொற, கிடுகு மட்டைக்க கிடந்தவங்களுக்கு ஓட்டு வீடு ஒரு கேடு, கொலர்சிப் பாசிபண்ண வைச்சி என்னத்த புடுங்கப்போறாவோ ஏதோ அவ ஏதோ படிச்சிக் கிழிச்ச மாதிரி.
10 September 2018
வறுமையில் அம்மணமாகும் மட்டக்களப்பு மக்கள்
வறுமையில் அம்மணமாகும் எமது சமுகத்தினைப் பார்த்தால், எமது மக்களுக்கான உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்களா? இல்லை அரசாங்கத்தின் சிஸ்ட்டத்தில் வேலை இல்லையா? ஒன்றுமே புரியவில்லை! எங்கோ தப்பு நடக்குது பாருங்க. நான் ஒரு தடைவ #வாகரையில் உள்ள #மதுரங்குளம்பக்கம் சென்றேன் அங்கு பல குடும்பங்களை சென்று நேரில் பார்க்கக்கிடைத்தது. இங்குள்ள குடும்பங்கள் வறுமையின் இலக்கணத்துக்கு சற்றும் பிசகாத உதாரணமாகத் திகழ்கின்றனர்.
05 September 2018
தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றி எம்மை வரலாற்றின் கொடிய பற்றாக்குறைக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் தனியார் முதலைகள்!

04 September 2018
கேட்டால் தருவோம் பிடுங்காதே!

02 September 2018
மேசன் வேலைக்கு படித்துவிட்டு வைத்திய தொழில் புரியலாமா!
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ம பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க.
01 September 2018
மனித மாற்றத்தை ஏற்படுத்துங்கள் மதமாற்றத்தினை தடுக்கலாம்.

தலைப்புக்கு வருவதற்கு முன் ஒரு சிறிய விளக்கத்தினை தரலாம் என நினைக்கின்றேன். இந்துக்கள் எல்லோரும் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. ஆனால் இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. மற்ற மதக் கடவுள்களின் ஆயுதங்கள் இல்லை. ஆனால் ஆயுதத்தினை மற்ற மதத்தினர் கையில் வைத்துள்ளனர். மனிதர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதாலேயே இந்து மதக் கடவுளின் கைகளில் ஆயுதம் உள்ளது. கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும என்று நினைப்பதாலேலே மற்ற மதத்தவர் கையில் ஆயுதங்கள் உள்ளது. என கண்ணதாசன் கூறியிருப்பது இன்றய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வைத்துள்ளது.
05 August 2018
வன்முறையற்ற கையாழுகையே கல்விக்கூடங்களில் வளர்ச்சிபெற்ற பிரஜைகளை பிரசவிக்கும்
28 June 2018
டெங்கு ஆய்வு முடிவுகளின் தேசியக் கலந்துரையாடல்

27 June 2018
சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது

17 June 2018
'சூழலை பேணி இடர்தணிப்போம்' பிரதேச செயலமர்வு- வெல்லாவெளி.
செந்நெல்லும் பாலும் தேனும், தீந்தமிழ் சுவையும் கலையும், வாவிமகள் போல் வற்றாது ஓடும் மீன்பாடும் தேநாடு, வளநாடு என்று போற்றுகின்றோம் எம் தென்தமிழீழ வளநாட்டை, மகிழ்ச்சிதான். இருந்தும் வயலை நம்பியே வாழ்க்கை என்ற மக்களின் வயிற்றிலடிக்கிறது இயற்கை, வெள்ளமாக, வறட்சியாக இன்னும் பலப்பல வடிவங்களில். காரணம், இயற்கைக்கு மனிதர்கள் செய்யும் இடர்தான் வேறில்லை. இந்த இடர் வரக்காரணங்கள் என்ன? இதனால் என்ன தீய விளைவுகளை எல்லாம் நாம் எதிர்கொள்ளுகின்றோம்? அவற்றை எவ்வாறு வெற்றிகொள்ளலாம்? ஏன்பன பற்றி எல்லாம் வெல்லாவெளி கலாசார மண்டபத்தினில் சங்கமித்த விவசாயிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், அனர்த்த முன்னாயத்த குழுக்களின் உறுப்பினர்கள், அபிவிருத்தி மற்றும் கிரா உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்பூட்டும் செயலமர்வினை 13.06.2018 அன்று பிரதேச செயலகததுடன் இணைந்து சக்தி உதவும் கரங்கள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
02 June 2018
நூலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான்.
'எனக்கு என்றால் சரியான விருப்பம் சேர் இந்த அணில், குரங்கு, சிங்கம் எல்லாம் இருக்கிற கதைப்புத்தகம் வாசிக்க, எங்கள டூறு கூட்டிப்போனாப்புல அந்தப் புத்தகதங்களை எல்லாம் பாத்த, அதுக்குப் பிறகு அப்பாட்ட சொன்ன அவருக்கு அதுகள் எங்க இருக்கிது என்றும் தெரியா என்றவர்' என்று ஒரு 3ம் தரத்தில் உள்ள மாணவன் சொன்னார். 'நாங்க இந்த 40ம் கொலனில இருந்து வருசத்துக்கு மட்டும்தான் களுவாஞ்சிக்குடி மாக்கட்டுக்கு உடுப்பெடுக்கவும், வருசத்துக்கு சாமான் வாங்கவும் டவுணுப்பக்கமா போவம், அங்கதான் புத்தகக்கடை இருக்கிதெண்டாங்க, ஆனா அதுக்கெல்லாம் காசு கூடவாம் என்றதால அப்பா அம்மாட்ட கேட்கிறதில்லை. பள்ளி புத்தகங்கள் மட்டும்தான் எங்களுக்கு தெரியும்' என்று இன்னொரு மாணவரும் கூறினார்கள் அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் முன்னே!
10 May 2018
கிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை!
இன்று ஒரு கலந்துரையாடல், அது கிழக்கில் உள்ள தமிழ் இளம் பெடிகள் தனியார்கள் வேலை தருகின்றோம் என அழைத்தாலும் போகின்றார்கள் இல்லையாம். காரணம் தாம் வேலை செய்வதென்றால் ஒன்றில் சுயதொழில் அல்லது அரச தொழில் செய்யவேண்டும் அல்லது நமக்கென்ன வயதா அம்மா அப்பா அல்லது வீட்டில் உள்ள யாராவது உழைத்து தருகின்றனர் தானே என்ற மனோ நிலையில் வாழுகின்றனராம்.
01 May 2018
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார!

நாடு இருக்கும் நெலயில
ஏறி இருக்கும் வெலயில
மிச்சம் மீதி புடிக்க முடியல- எங்க புள்ளங்களாம்
பள்ளிக் கூடம் படிக்க முடியல
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார
ஆளுக்காளு அடிக்கிறாங்க சனங்க காச
பொதுசனங்க பாவம்
போட்ட வோட்டு சாபம்
தலைவன் யாரு தெரியவில்ல
வழியும் வேறு புரியவில்ல
ஏறி இருக்கும் வெலயில
மிச்சம் மீதி புடிக்க முடியல- எங்க புள்ளங்களாம்
பள்ளிக் கூடம் படிக்க முடியல
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார
ஆளுக்காளு அடிக்கிறாங்க சனங்க காச
பொதுசனங்க பாவம்
போட்ட வோட்டு சாபம்
தலைவன் யாரு தெரியவில்ல
வழியும் வேறு புரியவில்ல
30 April 2018
உழைப்போர் யாவரும் ஒன்று..

28 April 2018
திருக் கொம்புச் சந்தி முதல்வா!

திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
அறுபதடி உயர்ந்து
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
23 April 2018
"கொம்புச்சந்திநாதம்” இசை இறுவட்டு வெளியீடு

22 April 2018
21 April 2018
மட்டக்களப்புக் கோட்டை (Batticaloa Fort )
கோட்டை கட்டுமளவக்கு செல்வங்கள் நிறைந்து காணப்பட்ட பழம்பெரும் மாநிலங்களிற்க்குள் மட்டக்களப்பு மாநிலமும் ஒன்றாகும். புராதன வரலாற்று பாரம்பரியங்களுடன் வாழும் தமிழ் மக்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரில் போத்துக்கீசர் காலம்தொட்டு பழமை வாய்ந்த அழகான உறுதி மிக்க கோட்டை இன்றும் மிடுக்குடன் வந்தோரெல்லாம் வசீகரிக்கும் ஒரு இடமாக காணப்படுகிறது.
16 April 2018
பூரித்துப் போனோம்! அப்படி என்னதான் நடந்தது அங்கு?
