ஒரு நாட்டின் மிக உயரிய பொறுப்பு, அதன்
குடிமக்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடம் வழங்குவதாகும். வீடு என்பது சுவர்கள்
மற்றும் கூரையின் கட்டுமானம் மட்டுமல்ல; அது கனவுகளின் அஸ்திவாரம், சந்ததிகளின்
நம்பிக்கை, வாழ்க்கையின்
அடைக்கலம். இலங்கையில்,
இந்த அடைக்கலம் பல நூறு உயிர்களை பலிகோரும் ஒரு கல்லறையாக
மாறிவிட்ட சோக உண்மையை,
தித்வா சூறாவளியும், தொடர்ந்த வெள்ள-நிலச்சரிவுகளும் இரத்தக்
கண்ணீரில் எழுதிக் காட்டியுள்ளன. இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றம் மட்டுமல்ல; அது நமது
சொந்த அலட்சியத்தின் வெளிப்பாடு, நமது குறுகிய நோக்கின் விளைவு, அரசியலும்
அதிகாரமும் சட்டத்தை மிதித்துச் செல்ல அனுமதித்த ஒரு முறைக்கெட்ட மரண நடனம். தேசிய
வீட்டுவசதிக் கொள்கை எனும் ஒரு உயிர்ப்புள்ள, முறையான திட்டம் மடிந்து கிடக்க, "அங்கீகாரமற்ற
கட்டுமானங்கள்" எனும் பிணத்தின் மீது நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதே இன்று
நோவூட்டும் உண்மை.
04 December 2025
03 December 2025
தித்வா எனும் பேரிடியும் ஆட்டம் காணும் சுற்றுலாத்துறை
கடந்த வாரம் இலங்கைத் தீவை ஊடறுத்து வீசிய 'தித்வா' சூறாவளியானது,
எமது தேசம் கடந்த
பல வருடங்களில் கண்டிராத ஒரு கோரத்தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள்
இடம்பெயர்ந்துள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும்
குடியிருப்புகள், துண்டிக்கப்பட்ட பிரதான வீதிகள், சிதைந்து போன
வாழ்வாதாரங்கள் என எங்கு நோக்கினும் அழிவின் சுவடுகளே எஞ்சியிருக்கின்றன.
குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டும், உழைத்துச் சேர்த்த உடைமைகள் அனைத்தும் சலனமற்று ஓடும் வெள்ள
நீரில் கரைந்து போனதும் ஒரு தேசிய சோகமாகும். அரசியல் மற்றும் பொருளாதார
ஆய்வுகளுக்கு அப்பால், முதலில் இந்த மனித அவலத்தை நாம் பணிவுடனும், ஆழமான
அனுதாபத்துடனும் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு
உயிருக்கும் பின்னால் ஒரு கனவு இருந்தது, ஒரு குடும்பம் இருந்தது. இந்த இழப்பு
ஈடுசெய்ய முடியாதது.
தித்வா சூறாவளிக்கு பின்னான இலங்கையின் புதிய பாதை
இலங்கையின்
வரலாற்றில் இதற்கு முன்னர் கண்டிராத ஒரு கொடூரமான அத்தியாயத்தை 'தித்வா' சூறாவளி எழுதிச் சென்றுள்ளது. அது வெறும் வானிலை நிகழ்வு அல்ல; அது ஒரு தேசத்தின் ஆன்மாவை உலுக்கிய, அதன்
பலவீனமான நரம்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஒரு பாரிய அனர்த்தமாகும். நாடு
முழுவதையும் நீரில் மூழ்கடித்து, பாரிய அழிவை
ஏற்படுத்தியுள்ள இந்தச் சூறாவளி, நம் தேசத்தின்
மீட்சிக்கான திறனையும், தலைமைத்துவத்தின் நேர்மையையும்,
மக்களின் கூட்டுறவையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் ஒரு சவாலாக
இன்று நம்முன் நிற்கிறது. இந்த மிகமோசமான அனர்த்தத்தின் ஆபத்தான நிலைமைகளை
எதிர்கொள்ளும் முகமாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
தலைமையிலான அரசாங்கம், ஒரு அசைக்க முடியாத உறுதியுடன்
கூடிய தேசிய மீட்பு மற்றும் மீள்கட்டுமானப் பணியை ஆரம்பித்துள்ளது. இந்தச்
சவாலானது, வெறும் நிவாரணப் பணியாக மட்டுமன்றி, 'பழைய நிலைக்கு அல்லது முன்பை விடச் சிறந்த நிலைக்கு மீண்டும்
கட்டியெழுப்பும்' (Build Back Better) ஒரு கூட்டுப்
பிரகடனமாகவும், எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும்
மாறியுள்ளது.
"தித்வா" சூறாவளிப் பேரழிவும் மீண்டெழுவதற்கான ஒருமைப்பாடு அவசியமும்
"தித்வா" சூறாவளியால் ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும்
உடைமை இழப்புகள், இலங்கையி
ன் பேரழிவு முகாமைத்துவம் (Disaster Management) மற்றும் உள்கட்டமைப்பு (Infrastructure) ஆகியவற்றின் ஆழமான பலவீனத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒரு மக்கள் குரலாகவும், கொள்கை வகுக்கும் மட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவனாகவும், நான் ஆணித்தரமாகக் கூறுவது என்னவென்றால், இந்தப் பேரழிவு வெறும் தற்காலிக நிவாரணம் மற்றும் உடைந்தவற்றைச் சரிசெய்வது என்ற வட்டத்துக்குள் அடக்கப்படக் கூடாது. இது, முன்கூட்டிய தயார்நிலை (Disaster Preparedness), அனாத்த அபாயக் குறைப்பு (Disaster Risk Reduction - DRR) மற்றும் மீணடெழும் உள்கட்டமைப்பு (Resilient Infrastructure) ஆகியவற்றில் தேசிய ரீதியில் ஒரு பாரிய கொள்கை மாற்றத்தை அமுல்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.
ன் பேரழிவு முகாமைத்துவம் (Disaster Management) மற்றும் உள்கட்டமைப்பு (Infrastructure) ஆகியவற்றின் ஆழமான பலவீனத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒரு மக்கள் குரலாகவும், கொள்கை வகுக்கும் மட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவனாகவும், நான் ஆணித்தரமாகக் கூறுவது என்னவென்றால், இந்தப் பேரழிவு வெறும் தற்காலிக நிவாரணம் மற்றும் உடைந்தவற்றைச் சரிசெய்வது என்ற வட்டத்துக்குள் அடக்கப்படக் கூடாது. இது, முன்கூட்டிய தயார்நிலை (Disaster Preparedness), அனாத்த அபாயக் குறைப்பு (Disaster Risk Reduction - DRR) மற்றும் மீணடெழும் உள்கட்டமைப்பு (Resilient Infrastructure) ஆகியவற்றில் தேசிய ரீதியில் ஒரு பாரிய கொள்கை மாற்றத்தை அமுல்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.
புதிய இலங்கையைக் கட்டியெழுப்புதல்: பழைய அடித்தளத்தில் அல்ல, நம்பிக்கையின் நிலத்தில்!
இலங்கையின்
மறுசீரமைப்பு (Rebuild) பற்றிய உரையாடலானது, வெறும் பொருளாதார புனரமைப்பு அல்லது
உடைந்தவற்றைச் சரிசெய்வது என்ற குறுகிய வரையறைக்குள் சுருக்கப்படக்கூடாது என்று
நான், மக்களின் குரலாகவும், அவர்களின் ஆதரவாளராகவும், ஆழமாக நம்புகிறேன். இது ஒரு புதிய
தேசத்தின் ஆத்மாவை, அடிப்படை ரீதியாகவும், ஆழமான நெறிமுறை ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மீளமைக்கும் ஒரு தேசிய இயக்கமாக இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப்
போருக்குப் பிந்தைய "Rebuild"
என்ற
கருத்தாக்கம், மேற்கத்திய நாடுகளில் வெறும் பௌதீகக்
கட்டமைப்புகளை மீண்டும் நிறுவுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அழிந்துபோன மனித
வளங்களுக்கு நீதி வழங்குவதற்காக Amnesty International போன்ற நிறுவனங்களை ஐக்கிய நாடுகள் சபை (UN) தலைமையிலான அமைப்புக்கள் நிறுவியது போல, எமது மறுசீரமைப்புப் பயணம் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
"தித்வா" சூறாவளியால் ஏற்பட்ட பாரிய இழப்பிலிருந்து மீண்டு வர அல்லது
இலங்கையின் நீண்டகால சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர உருவாக்கப்பட்ட
எந்தவொரு பொருளாதார முகாமைத்துவக் குழுவும் (Economic Management Committee), வெறும் patch-work அல்லது மேற்பரப்புப் பூச்சு வேலைகளுக்கு அப்பால், ஒரு புதிய பரிமாணத்தில் கட்டியெழுப்பும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக
மறுகட்டமைப்புக்கு வித்திட
வேண்டும்.
02 December 2025
பேரழிவின் நிழலில்- பொருளாதார மீட்பும், மக்களின் உயிர்க்காப்புச் சீர்திருத்தமும்
சமீபத்தில்
இலங்கையை உலுக்கிய டிட்வா (Ditwah) சூறாவளியின் கோரத் தாண்டவம், நான்கு நாட்களின் அச்சமூட்டும்
அத்தியாயத்திற்குப் பிறகு நகர்ந்து சென்றிருந்தாலும், அதன் நிஜமான அழிவு இன்னும் எம்மை விட்டு
விலகவில்லை. நவம்பர் 26 ஆம் திகதி புதன்கிழமை நிலத்தைத் தொட்ட
இந்தச் சூறாவளியின் விளைவாக, உயிரிழப்புகளின்
எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளதோடு, கிட்டத்தட்ட 300 பேர் காணாமல் போயுள்ளனர்; 78,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த
அழிவின் தாக்கம் 2004 ஆம் ஆண்டின் சுனாமியின் மோசமான நினைவுகளை
மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மக்களின் குரலாக, இந்தச் சோர்வடைந்த தேசத்தின் சார்பாக
நான் உறுதியாகக் கூறுகிறேன்: மிக மோசமான நிலை இன்னும் வரவிருக்கிறது, அது பொருளாதாரச் சீரழிவு, வாழ்க்கைப் பாதிப்பு மற்றும் மோசமான
பாதுகாப்புத் தயார்நிலையின் வடிவில் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
அமைதியில் பதுங்கியிருக்கும் ஆபத்து- அனர்த்தத்தின் இரண்டாம் கட்டமும் அவசர விழிப்புணர்வும்
இலங்கைத் தீவு தற்போது அதன் சமீபத்திய வரலாற்றில் மிகவும்
சவாலான மற்றும் மாறுபட்ட அனர்த்தச் சூழலுக்குள் மூழ்கியுள்ளது. பெரும் மாவட்டங்களை
ஊடறுத்துச் சென்ற வெள்ளப்பெருக்கு, அபாயகரமான மட்டங்களைத் தாண்டிப் பாயும் ஆறுகள், வீடுகளைத்
தரைமட்டமாக்கிய மண்சரிவுகள் எனத் தேசம் ஒரு பாரிய இயற்கைச் சீற்றத்தை
எதிர்கொண்டுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதுடன், மகா ஓயா மற்றும்
கலா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மொரகஹகந்த-லக்கல போன்ற பகுதிகளில்
பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
01 December 2025
இயற்கை அனர்த்தங்கள் தாக்கும்போதெல்லாம், மக்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்திருக்கிறார்கள்
இலங்கையின் சமீபத்திய வரலாற்றில், சுனாமிப் பேரழிவிற்குப் பிறகு
நாடு சந்தித்திருக்கும் மிக மோசமான இயற்கை அனர்த்தமாகத் தற்போதைய வெள்ளம் மற்றும்
மண்சரிவுப் பேரழிவுகள் உருவெடுத்துள்ளன. இந்தக் கசப்பான அனுபவம் ஒவ்வொரு
இலங்கையரின் மனதிலும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகையதொரு
நெருக்கடியான காலகட்டத்தில், ஒரு தேசமாக நாம் எவ்வாறு இதைக்
கையாாள்கிறோம் என்பதும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு கரம் கொடுக்கிறோம்
என்பதுமே எமது சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டும் அளவுகோலாகும். இயற்கைச்
சீற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவற்றை எதிர்கொள்ளும் விதம்
மற்றும் அதிலிருந்து மீண்டெழும் வல்லமை ஆகியவை அனர்த்த முகாமைத்துவத்தின் (Disaster Management) வினைத்திறனில் தங்கியுள்ளன.

