பேரிடர் வந்தது பெருநீதி தந்தது
மக்களை ஒரு கணம் நினை
இதில் கொள்ளை அடிப்பது வினை
ஆறுதலாகட்டும் கொடு
அள்ளி எடுப்பதை விடு
கொண்டு கொடுப்பதற்கு பயனில்லை
எல்லாம் இங்கு நீதியடா
தொடர்ந்திடும் மழை ஓயவில்லை
தொலைத்தவர் நெஞ்சம் காயவில்லை
உதவியின் கரம் சாயவில்லை
ஓங்கிய இடர் மாயவில்லை
இடையில் தரகர் தேவையில்லை
இழப்பை கணிக்க ஏது தடை
இழந்த மக்கள் ஏக்கத்திலே
எடுக்கும் எதுவும் நிலைப்பதில்லை
இருப்பதை உடனடி பகர்ந்து கொடு
அனுர இருக்கார் கவலை விடு
பேரிடர் வந்தது பெருநீதி தந்தது
மக்களை ஒரு கணம் நினை


0 comments:
Post a Comment