காற்றும் மழையும் வெள்ளமும் தாக்கி
கடந்து வந்தோம் உள்ளதைத் தூக்கி
ஊற்றும் மழையும் ஓயவும் இல்லை
ஆற்றல் கொண்டே எழுந்திடு மனமே!
ஓலம் கேட்டு ஓய்ந்தது நாடு
உதவி கேட்டு போனது பாடு
கெஞ்சி இனிமேல் கிடைப்பதும் இல்லை
நெஞ்சே எழுந்து முன்னடவாயே
கடந்து வந்தோம் ஆயிரம் இடர்கள்
தொடந்து செல்வோம் திடமாய் நிமிந்து
போனதெல்லாம் செலவில் வைப்போம்
பொறுமையுடனே முன்னே நிற்போம்
காற்றும் மழையும் வெள்ளமும் தாக்கி
கடந்து வந்தோம் உள்ளதைத் தூக்கி
ஊற்றும் மழையும் ஓயவும் இல்லை
ஆற்றல் கொண்டே எழுந்திடு மனமே



0 comments:
Post a Comment