ADS 468x60

04 December 2025

ஒன்றாய் மீண்டெழுவோம்

 
ஒன்றாய் மீண்டெழுவோம்

ஒன்றாய் மீண்டெழுவோம்

நாம் ஒன்றாய் மீண்டெழுவோம்

அனர்தங்கள் செய்த அழிவுகள் தாண்டி

அனைவரும் ஒன்றாய் நம்பிக்கை சுமந்து

மூழ்கிய நாட்டை முன்னேற்றிடவே

ஒன்றாய் மீண்டெழுவோம்

நாம் ஒன்றாய் மீண்டெழுவோம்


கூட இருந்தோர் தேடிய செல்வம்

ஆடு மாடு அழகிய வீடு

அழிந்தது அடியோடு

விழுந்தது குடியோடு

பறந்தது காற்றோடு

இறந்தவை நேற்றோடு

வேதனை எல்லாம் வேருடன் பிடுங்கி

சோதனை எல்லாம் சுறுட்டியெறிந்து

கண்ணீர் துடைத்து கரங்களை இணைத்து

ஒன்றாய் மீண்டெழுவோம்

நாம் ஒன்றாய் மீண்டெழுவோம்


சாய்ந்த நாட்டை முண்டு கொடுத்து

சாலச் சிறந்த விருத்திகள் செய்து

இனி ஒரு விதிசெய்வோம்

அனைவரும் ஒன்றிணைவோம்

கிடைத்திடும் உதவிக்கெல்லாம்

நன்றிகள் நாம் பகர்வோம்

திட்டங்கள் செய்து திடமுடன் ஒன்றாய்

நம்பிக்கை கொண்டு நாளை எழுவோம்

சுயமாய் சுகமாய் உறுதியில் ஊன்றி

ஒன்றாய் மீண்டெழுவோம்

நாம் ஒன்றாய் மீண்டெழுவோம் 

0 comments:

Post a Comment