உன் அன்பில்லாத வாழ்கையிலே ஆனந்தம் இல்லை
ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை
ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை
இயேசு உந்தன் நாமத்திலே உன்னதம் கண்டேன்
நான் உன்னதம் கண்டேன்
பிறர் துன்பம் தாங்குதற்கு சிலுவை சுமந்தாய்
அந்த சிலுவையிலே உயிர் துறந்து மீண்டும் எழுந்தாய்
துன்பம் எல்லாம் அன்பருக்காய் ஏற்று மடிந்தாய்
உனை போல தெய்வம் வாழ்கையிலே கண்டதும் இல்லை
கண்டதும் இல்லை
ஆயர் போல எம்மை என்றும் அழைத்துச் செல்லுவார்
அங்கு அளப்பெரிய கிருபை தந்து அணைத்துக் கொள்ளுவார்
காயம் எல்லாம் என்னிடத்தே ஆற்றி வையப்பா
உனை காதல் செய்ய அன்பொளியை ஏற்றி வையப்பா
நீ ஏற்றி வையப்பா


0 comments:
Post a Comment