நெஞ்சே எழு நெஞ்சே எழு
சரியும் நிலமும் சகதி வெள்ளமும்
சாயும் மரமும் பேயும் மழையும்
ஒன்றானால் என்ன செய்யுமோ?
ஓயாமல் மழையும் பெய்யுமோ?
பாதை உடைவும் பருவப் புயலும்
இழந்த உறவும் இழைத்த தவறும்
நின்றானால் வென்று கூடுமோ!
நேற்றெல்லாம் நாளை ஆகுமோ!
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
ஊற்றுப் போல ஊறு
தடை கடந்து ஏறு
கவலை எல்லாம் களட்டி வையடா
காலைத் தூக்கி வேலை செய்யடா
தாண்டி வா நீ கூட்டை
புரட்டிப் போடு நாட்டை
நீயும் எங்கள் மனித மூலமே
நாளை மாறும் எங்கள் காலமே
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
போர் கடந்து வந்தோம்
புயல் கடந்து வந்தோம்
இதுவும் கடந்து ஓடிப் போகுமே
எதுவும் முடியும் எழுந்து ஓடிவா
நாட்டைக் கட்டி எழுப்பலாம்
வீட்டைக் கட்டி எழுப்பலாம்
நம்பிக்கையை நெஞ்சில் வையடா
நானும் உனக்கு வலது கையடா
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு



0 comments:
Post a Comment